Friday, April 17, 2009
ASAL ANOTHER BASHA - SARAN
சூடுப்பிடித்திருக்கும் தேர்தல் கூட்டணி பேச்சுகளுக்கு சற்றும் குறைவில்லாமல் அஜித்-சரண் கூட்டணியில் உருவாகும் அசலும் ஹாட் டாபிக்காகியுள்ளது.
ஐந்தாவது முறையாக அஜித்துடன் இணையும் சரண், தனது கூட்டணி குறித்த அம்சங்களை அசைபோட்டபோது....... “ஏழு வருஷத்துக்கு முன் எனக்குள் விதைப்போட்ட ‘கரு’தான் இப்போ ‘அசல்’ கதையாக வேர்விட்டு நிற்கிறது. நம்பிக்கை துரோகத்திற்கு எதிரா வெடித்து கிளம்பும் ஒருவனின் கதைதான் இது.
வில்லனை பலிவாங்குறதோட சுபம் போடுற வழக்கமான படமா இது இருக்காது. டான், இண்டர்நேஷனல் சேஸிங்னு இன்ட்ரஸ்டிங்கான திரைக்கதையை ட்ரை பண்ணியிருக்கேன்.”
அஜித்தின் கேரக்டர் டானா?
“இல்லைன்னு சொன்னா விடப்போறிங்களா என்ன? பாட்ஷா ரஜினி மாதிரியான கேரக்டர்தான் அஜித்துக்கு. படம் வந்தபிறகு அஜித்தை சூப்பர் ஸ்டாரா கொண்டாடப்போவது நிச்சயம். கெட்டப்,மேனரிசம்,ஸ்டைல்னு புது அஜித்துக்கு நிறையவே தீனி இருக்கு”.
இண்டர்நேஷனல் சேஸிங்னா எந்த நாட்டுக்கு போறீங்க?
“நாட்டுக்கு இல்லை, நாடுகளுக்கு. கிரீஸ்,துருக்கி,இத்தாலி,துபாய்,சிங்கப்பூர்னு பல இடங்களில் படமாகிறது. இன்னும் பத்து வருஷத்துக்கு பேசப்படுற ஒரு ஆக்*ஷன் படமா அசல் இருக்கும்” சரணின் குரலில் அசல் வேகம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment